துருக்கி - ஆர்மீனியா இடையே மோதல் போக்கால் மூடப்பட்டிருந்த எல்லை சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு..!
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையேயான எல்லை சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது.
துருக்கியில் ஒட்டோமன் பேரரசு காலத்தில், கடந்த 1915ம் ஆண்டு 15 லட்சம் ஆர்மீனிய மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால், அலிகன் எல்லை மூடப்பட்டது. பின், 1988ம் ஆண்டு ஆர்மீனியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போது துருக்கி நிவாரண பொருட்களை அனுப்புவதற்காக இந்த எல்லை கடைசியாக திறக்கப்பட்டது.
அதன் பிறகு, தற்போது மீண்டும் எல்லை திறக்கப்பட்டு அர்மேனியாவில் இருந்து 100 டன் நிவாரண பொருட்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டன.
Comments