பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல் - 3 பேர் பலி

0 1644

பாகிஸ்தானில், பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கஜோரி சௌக் பெட்ரோலிய நிறுவன ஊழியர்கள், பணிநேரம் முடிந்து பலத்த பாதுகாப்புடன் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்ற படையின் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 3 சக்கர வாகனத்தை கொண்டு தீவிரவாதி ஒருவன் மோதியுள்ளான்.

இதில், சம்பவ இடத்திலே 3 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments