ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு ரூ.20 லட்சம் அபராதம்
விமானிகளின் பயிற்சி தொடர்பான சில விதிமுறைகளை மீறியதற்காக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மாதம் 23ம் தேதி ஏர் ஆசியா விமான நிறுவனம் விமானப் போக்குவரத்து விதிகள், விமானிகள் திறன் மற்றும் கருவி மதிப்பீட்டு சோதனைகளை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்திற்கு மேற்கண்ட அபராதம் விதிக்கப்பட்டதாகவும், மேரும் ஏர் ஆசிய நிறுவன பயிற்சித் தலைவரை 3 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யவும அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments