துருக்கி நிலநடுக்கத்தில் 152 ஆண்டுப் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம் சேதம்
துருக்கி நிலநடுக்கத்தில், 152 ஆண்டுப் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம் கடுமையாக சேதமடைந்தது. இஸ்கெண்டருன் மாவட்டத்தில் உள்ள அந்த தேவாலயத்தின் கட்டிடம், கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உருக்குலைந்து கிடந்தது.
இடிபாடுகளில் சிக்கி தேவாலயத்தின் பாதிரியார் மற்றும் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்தனர். இதனைக் கண்ட முஸ்லீம்கள் பலர் கண்ணீர் சிந்தியதாகவும், அவர்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது கிறிஸ்தவ குழந்தைகளுடன் விளையாடுவதற்காக வந்து சென்றதாகவும் கத்தோலிக்க அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
Comments