டெல்லி-மும்பை இடையிலான அதிவிரைவுச் சாலையின் ஜெய்ப்பூர் இணைப்புப் பகுதியை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லி-மும்பை இடையிலான அதிவிரைவுச் சாலையின் ஜெய்ப்பூர் இணைப்புப் பகுதியை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
ராஜஸ்தானில் இருந்து ஹரியானாவின் குருகிராம் வரையிலான பாதை திறந்து விடப்படுகிறது. ஆறுமாநிலங்கள் வழியாகச் செல்லும் இந்தப் பாதை ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இப்பணிகள் முழுமையாகும்போது மும்பை-டெல்லி இடையிலான பயண தூரம் பாதியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்வாகனங்களுக்கான தனிப் பாதைகள், சாலைகள் நெடுக உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள், போன்றவையும் அமைக்கப்படுகின்றன.
Comments