பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து... ஓட்டுநர் பலி

0 3402

கமுதி அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநரான நல்லமருது என்பவர், இன்று காலை 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு, கமுதி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பெருமாள்தேவன்பட்டி பகுதியில் சென்ற போது, திடீரென சாலையின் குறுக்கே காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்ததால், அவற்றின் மீது மோதாமலிருக்க ஓட்டுநர் ஆட்டோவை திருப்பிய போது, நிலைதடுமாறி ஆட்டோ சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், மாணவர்கள் காயங்களுடன் உயிர்தப்பினர். 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் மருத்துவமனை முன்பு திரண்டு கதறி அழுதனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments