3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது SSLV D2 ராக்கெட்

0 1978

 

இஸ்ரோவின் இஓஎஸ் 07 உட்பட 3 செயற்கைக்கோள்களுடன், SSLV-D2 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, செயற்கைக்கோள்கள் அதற்குரிய புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, காலை 9.18 மணிக்கு SSLV-D2 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

சுமார் 15 நிமிட பயணத்தை அடுத்து, இஸ்ரோவின் இஓஎஸ் 07, அமெரிக்காவின் ஜானஸ் -1 மற்றும் மாணவிகள் உருவாக்கிய ஆசாதி சாட் 2 ஆகிய 3 செயற்கைக்கோள்களும், 450 கிலோமீட்டர் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 750 மாணவிகளின் கூட்டு முயற்சியில் உருவான ஆசாதி சாட் 2 செயற்கைக்கோளும், விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments