வருமானவரித் துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி... ரூ.5 லட்சம் கேட்டு தம்பதி காரில் கடத்தல்
மதுரை அருகே கவுண்டன்பட்டியில் வருமானவரித் துறை அதிகாரிகள் போல் நடித்து 5 லட்சம் கேட்டு தம்பதியை கடத்திய பெண் உட்பட 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மதுரை TVS நகரை சேர்ந்த சுப்பையா- கிருஷ்ணவேணி தம்பதியினரை கடந்த 5 ஆம் தேதி அன்று கவுண்டம்பட்டி அருகே 2 கார்களில் வந்த கும்பல் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கடத்தி சென்றுள்ளது. பின்னர் அந்த கும்பல் சுப்பையாவிடம் 5 லட்சம் ரூபாய் தந்தால் விடுவிப்பதாக கூறியுள்ளது.
ஆனால் சுப்பையா அடையாள அட்டையை கேட்டதால் உசிலம்பட்டி விலக்கு அருகில் தம்பதியினரை இறக்கி விட்டு கும்பல் சென்றுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மதுரையைச் சேர்ந்த சாந்தி, முருகன் உள்பட 9பேரைக் கைது செய்தனர். பணத்திற்காக சுப்பையாவை கடத்தி பணம் பறிக்க இந்த கும்பல் திட்டம் போட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
Comments