ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தியுள்ள அஸ்ஸாம் அரசுக்கு ஹாலிவுட் நடிகர் பாராட்டு!
ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தியுள்ள அஸ்ஸாம் அரசின் நடவடிக்கைகளுக்கு டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா வனவியல் தேசியப் பூங்காவில் சுமார் 2200 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. அவை வேட்டையாடப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
1977ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக கடந்த புத்தாண்டுதினத்தில் காண்டா மிருகங்கள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டு விட்டதாக மாநில அரசு அறிவித்தது.
இதற்கு பிரதமர் மோடியும் ஏராளமான உலகளவிலான சூழலியல் ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
Comments