சிறுவனை பணயக் கைதியாக்கி சிலிண்டரை திறந்து கொல்ல முயற்சி.. கதவை உடைத்து மீட்ட போலீஸ்..! மனைவி நேசர் அட்டகாசம்

0 3065

கிருஷ்ணகிரி அருகே மனைவியின் அண்ணன் மகனை கடத்தி பணய கைதியாக வைத்துக் கொண்டு  காயப்படுத்தி விட்டு, மனைவிநேசர் போல நாடகம் போட்ட இளைஞரிடம் இருந்து சிறுவன் மீட்கப்பட்ட பின்னனி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அமுதா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் 2 மகள்களும், ஒரு மகனும் உளளனர். வீடுகட்டியதற்கு வாங்கிய கடன் தொடர்பாக கணவன் ராஜா மனைவி அமுதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு அமுதாவை அவரது கணவன் ராஜா பலமாக தாக்கியதாக கூறப்படுகின்றது. இதில் காயம் அடைந்த அமுதா தனது பெரியம்மா மகனான காளியப்பனுக்கு தகவல் அளித்துள்ளார்.. அவர் வந்து அமுதாவை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

தனது மனைவியை பிரித்து கூட்டிச் சென்று விட்டதாக நினைத்துக் கொண்ட ராஜா, பாரூர் அடுத்த புங்கம்பட்டியில் உள்ள காளியப்பனின் வீட்டிற்கு சென்று அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த காளியப்பனின் மூன்று வயது மகனான ரோஷத்தை கடத்தி வந்து தனது வீட்டில் பூட்டி பணய கைதியாக வைத்துக் கொண்டு மனைவியை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பாரூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன், வீட்டிற்குள் பதுங்கி இருந்த ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராஜாவை சமாதானப்படுத்துவது போல போலீசார் எவ்வளவோ பேசியும் கேட்காத ராஜா, வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு வீட்டை வெடிக்க வைக்கப்போவதாக பகிரங்க மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு போச்சம் பள்ளி தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். கேசின் நாற்றம் வெளியே வந்தது தெரிந்தவுடன் நிலைமை கை மீறி செல்வதை உணர்ந்து , காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருடன் இணைந்து உடனடியாக துரிதமாக செயல்பட்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார்.

ராஜா கையில் இருந்த தீப்பற்ற வைக்கும் லைட்டர் மற்றும் சிலிண்டரை பிடுங்கி தள்ளிவிட்டு அவன் கையில் இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

பின்னர் குழந்தைக்கு வேண்டிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் இருந்த சிலிண்டரை தீயணைப்பு துறையினர் தூக்கி ஓடி வந்து வயல்வெளியில் போட்டு ஆப் செய்தனர்.

பாரூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு சிலிண்டரை ஆப் செய்ததால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போலீசில் சிக்கிய தன்னை இங்கேயே விட்டுச்செல்லும்படி ராஜா அழுதபடியே கூறினார்.

மனைவி நேசரின் கொலை மிரட்டல் நாடகத்தை 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் முடித்து வைத்த போலீசார், ராஜாவை சமாதானம் செய்வது போல அழைத்துச்சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றி கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments