பேட்டரிகளுக்குப் பயன்படுத்தப்படும் லித்தியம் உலோகம் ஜம்முகாஷ்மீரில் கண்டுபிடிப்பு
ஜம்மு-காஷ்மீரில், பேட்டரிகளுக்குப் பயன்படுத்தப்படும் லித்தியம் உலோகம் முதன்முறையாக அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த கனிம இயக்குநரக ஆராய்ச்சியாளர்கள், அங்கு பூமிக்கு அடியில் 5.9 மில்லியன் டன் அளவிலான லித்திய படிவுகள் இருப்பதை கண்டறிந்தனர்.
உலோகமான லித்தியம், செல்போன்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்குப் பயன்படும் பேட்டரி தயாரிப்புகளில் முக்கிய பங்காற்றுகிறது.
பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கான மாசற்ற எரிபொருளை நோக்கி நடைபோடும் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பும் - விற்பனையும் அதிகமாக ஊக்குவிக்கப்படும் இச்சூழலில், இந்த லித்தியம் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது
Comments