இலவச வேட்டி, சேலை வழங்காததால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு - இபிஎஸ் குற்றச்சாட்டு

0 1688

திமுக அரசு பொறுப்பேற்ற பின் இலவச வேட்டி - சேலைகள் சரிவர வழங்கப்படாததால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய இ.பி.எஸ்., குறிப்பிட்ட காலத்தில் வேட்டி சேலைக்கான பணியை விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்படாததால் தற்போது வேலைவாய்ப்பை அவர்கள் இழந்து விட்டதாகவும் கூறினார்.

2 கோடி ரூபாயில் கலைஞர் நினைவிடம் அருகில் பேனா சிலையை அமைத்து, விட்டு எஞ்சிய 78 கோடி ரூபாயை மக்களுக்காக செலவு செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments