எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்தே தீரும் - பிரதமர்
எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்தே தீரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் பதிலுரை அளித்தார்.
அப்போது, அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பேசிய பிரதமர், அரசுத் திட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதில் சிலருக்கு பிரச்சனைகள் உள்ளதாகவும், முன்பு 600க்கும் மேற்பட்ட திட்டங்களின் பெயர்கள் காந்தி - நேரு பெயர்களில் இருந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து, எம்ஜிஆர், கருணாநிதியின் ஆட்சியைக் 2 முறை கலைத்த காங்கிரசுடன் கூட்டணியா? என்றும் மாநிலங்களவையில் திமுக எம்பிக்களிடம் பிரதமர் வினவினார்.
Comments