பாகிஸ்தானில், அடுத்த வாரம் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என தகவல்.. விற்பனையை குறைத்த எண்ணெய் நிறுவனங்கள்!
பாகிஸ்தானில், அடுத்த வாரம் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானதால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், லாபமீட்டும் நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு குறைவான அளவில் பெட்ரோல் விற்பனை செய்துவருகின்றனர்.
பல பெட்ரோல் நிலையங்களில், இருசக்கர வாகனங்களில் 2 லிட்டர் பெட்ரோல் மட்டுமே நிரப்பபடுகின்றன.
பெட்ரோல் விலையை உயர்த்தப்போவதில்லை என்றும், அடுத்த 20 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் இருப்பு உள்ளதாக தெரிவித்த பாகிஸ்தான் அரசு, செயற்கை தட்டுப்பாடை ஏற்படுத்தும் எண்ணெய் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
Comments