புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை முடிகளை தானமாக வழங்கிய ராணிமேரி கல்லூரி மாணவிகள்!

0 2054

புற்றுநோய் பாதிப்புக்கு அளிக்கப்படும் கதிரியக்க சிகிச்சையில் தலைமுடியை இழந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக தலை முடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி சென்னை, ராணிமேரி கல்லூரியில் நடைபெற்றது.

100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் தலைமுடியில் இருந்து குறைந்தபட்சம் 4 சென்டி மீட்டர் அளவு முடியை தானமாக புற்றுநோய் பாதித்தவர்களுக்கு வழங்கினர்.

10க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்களும், மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் சிலரும் தாமாக முன்வந்து தலைமுடியை தானம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments