சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கிய விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து வரும் கால்நடை மருத்துவக் குழு
சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்த விலங்குகளை கால்நடை மருத்துவர்கள் குழுவினர் மீட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.
சிலியின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சுமார் 2 லட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், கான்செப்சியன் பல்கலைக்கழக கால்நடை மருத்துவக் குழுவும், நியூபிள் வனவிலங்கு மறுவாழ்வு மையமும் இணைந்து, காயமடைந்த மான்கள் உள்ளிட்ட விலங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Comments