துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி 16 ஆயிரத்தை தாண்டியது..!
துருக்கி, சிரியா நாடுகளில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த திங்கள்கிழமை நேரிட்ட அந்த நிலநடுக்கத்தால், ஆயிரக்கணக்கான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனோரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் தொடர்ந்து சடலங்கள் ண்டெடுக்கப்பட்டு கவருவதாலும், பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழந்து வருவதாலும் பலி எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
துருக்கியில் மட்டும் நிலநடுக்கத்தில் சிக்கி 12 ஆயிரத்து 873 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் சிரியாவில் நிலநடுக்கத்தில் 3 ஆயிரத்து 162 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பேரிழப்பை சந்தித் நகரங்களான இஸ்கன்டெருன் மற்றும் அடானா பகுதிகளில் அதிபர் எர்டோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் நிலவரம் குறித்து எர்டோகன் கேட்டறிந்தார்.
இதனிடையே, hatay நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 68 மணி நேரமாக போராடிய குழந்தை உள்ளிட்ட 5 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
இதேபோல் காஜியன்டேப் நகரில் 62 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 25 வயது இளம்பெண்ணையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
Comments