ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா எனப் புகார்.. தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

0 2238

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக தனியார் மண்டபத்தில் பணம் வழங்குவதாக எழுந்த புகாரை அடுத்து தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரகாஷ் திருமண மண்டபத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்த துணை தேர்தல் அலுவலர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் மண்டபத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே தேர்தல் அலுவலர் முத்துக்கிருஷ்ணனை முற்றுகையிட்டு, மண்டபத்தில் இருந்தவர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments