பெரு நாட்டில் வேகமாகப் பரவும் பறவைக்‍ காய்ச்சல்.. 55,000 பறவைகளும் 585 கடற்சிங்கங்களும் உயிரிழப்பு!

0 1718

பறவைக் காய்ச்சல் காரணமாக பெரு நாட்டில் 55 ஆயிரம் பறவைகள் மற்றும் 580-க்கும் மேற்பட்ட கடற்சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.

சமீப காலமாக அங்கு H5N1 வகை பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், பாதுகாக்கப்பட்ட 8 கடலோரப் பகுதிகளில் இருந்து 55,000 பறவைகள்  உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இவற்றில் பெலிகான்கள், கடல் பறவைகள், பென்குவின்கள் அதிகளவில் பலியாகி உள்ளன. பாதுகாக்கப்பட்ட 7 கடல்வாழ் பகுதிகளில் இருந்து 585 கடற்சிங்கங்கள் உயிரிழந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments