கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு!
சென்னை காரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெங்களூரை சேர்ந்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற நிலையில், தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கண்ணகி நகர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் பெங்களூரை சேர்ந்த செந்தில் குமார் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மணியிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments