பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 30 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு..!
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயணிகள் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில், 30 பேர் உயிரிழந்தனர்.
கில்கித்தில் இருந்து நேற்றிரவு ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் எதிரே வந்த கார் மீது மோதி இரு வாகனங்களும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தன.
இதில் 30 பேர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி உயிரிழந்த நிலையில், மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments