ChatGPT-க்கு போட்டியாக வருகிறது கூகுள் Bard
மைக்ரோசாப்டின் சாட்ஜிபிடி-க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பார்டு என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் OpenAI எனும் நிறுவனத்தால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்தது, பல்வேறு நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்தது.
இந்நிலையில், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதியதாக பார்டு என்ற உரையாடல் நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
LaMDA எனும் உரையாடல் பயன்பாட்டுக்கான மொழி அப்ளிகேஷன் என்ற தளத்தின் கீழ் பார்டு சாட்பாட் இயங்கவுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Comments