பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் 1.50 கோடி மக்களுக்கு பாதிப்பு..!
பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு ஏற்பட்டால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வில், உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் ஆபத்தான விகிதத்தில் உருகி வருவதாகத் தெரிவித்துள்ளது.
இவை வெளியேற்றும் அதிக அளவிலான நீர், பனிப்பாறை விட்டுச் சென்ற அழுத்தத்தை நிரப்புவதால், இதுவே பனிப்பாறை ஏரி என குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அருகில் வசிக்கும் ஒருகோடியே 50 லட்சம் மக்கள் பெரும் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Comments