மும்பை விமான நிலையத்தை அதானி குழுமத்துக்குத் தர நெருக்குதல் இல்லை… ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஜிவிகே நிறுவனம் திட்டவட்ட மறுப்பு

0 1882

மும்பை விமானநிலைய பராமரிப்பை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய எந்தவித நெருக்கடியையும் யாரும் தரவில்லை என்று ஜிவிகே நிறுவனத்தின் அதிபர் சஞ்சய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான அரசு ஜிவிகேக்கு நெருக்கடி கொடுத்து மும்பை விமான நிலையத்தை அதானிக்கு விற்று விட்டதாக மக்களவையில் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை முன்பு மும்பை பராமரிப்பை மேற்கொண்டிருந்த ஜிவிகே நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமலும் கோவிட் போன்ற பிரச்சினைகளால் வருமானம் இல்லாமலும் கடன்களை அடைப்பதற்காகவும் தான் மும்பை நிலையப் பராமரிப்பு அதானி குழுமத்துக்கு விற்கப்பட்டதாக சஞ்சய் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments