சவுகார்பேட்டையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த வடமாநில சிறுவர்கள் 24 பேர் மீட்பு..!
சென்னை சவுகார்பேட்டையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வடமாநில சிறுவர்களை 24 பேரை, தமிழக அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சவுகார்ப்பேட்டையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப்பட்டறைகளில் 18 மற்றும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு சிறுவர்களை மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், உரிமையாளர்கள் பெற்றோர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து சிறுவர்களை அழைத்து வந்தது தெரிய வந்துள்ளது.
சிறுவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உணவு மட்டும் கொடுத்து, ஓய்வின்றி 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கியதும் தெரிய வந்துள்ளது.
விதிகளை மீறி குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்திய நிறுவனங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments