காருக்கு அடியில் சிக்கிய உடல்.. 10 கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்ட சம்பவம்.. டோல்கேட்டால் சிக்கினார்..

0 1876
உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள டோல்கேட்டிற்கு, காரின் அடியில் சிக்கிக்கொண்ட மனித உடலோடு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள டோல்கேட்டிற்கு, காரின் அடியில் சிக்கிக்கொண்ட மனித உடலோடு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியைச் சேர்ந்த வீரேந்தர் சிங், ஆக்ராவிலிருந்து நொய்டா செல்வதற்காக மதுரா டோல்கேட்டிற்கு வந்தபோது, அவரது காரின் அடியில் மனித உடல் சிக்கியிருந்ததைக் கண்ட ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

காரின் அடியில் சிக்கியிருந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார், வீரேந்தரிடம் விசாரணை நடத்திய நிலையில், தான் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்ததோடு, ஏற்கனவே விபத்தில் சிக்கி சாலையில் கிடந்த சடலம் தனது காரில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறினார்.

அவரது காரில் சிக்கிய உடல் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கலாம் என கணித்த போலீசார், வழியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments