சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 5 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 5 கூடுதல் நீதிபதிகளுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்பது பேரை நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத்தலைவருக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. மூன்று மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. இ
வர்களில் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இன்று, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 பேரும் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதன் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆகவும், அதில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆகவும் உள்ளது. 18 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.
Comments