திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்துக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்
திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்திற்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததால் அபிஷேகம், பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
திருத்தணி மலைப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் சுற்றித்திரியும் நிலையில், இன்று காலை 10க்கும் மேற்பட்ட குரங்குகள் மூலஸ்தானத்திற்குள் புகுந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர். கோயில் பணியாளர்கள் கம்புகளை வைத்து, குரங்குகளை அச்சுறுத்தி விரட்டினர்.
குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பதால், அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments