நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கனமழையால் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

0 1483

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெய்த கனமழையினால் 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெல்மணிகள் முளைத்து வீணானது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பருவம் தவறி பெய்த தொடர் கனமழையல் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், கரியாபட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி  சேதம் அடைந்துள்ளன. மழைநீரில் சாய்ந்த சம்பா நெல்மணிகள் வெயில் காட்ட தொடங்கியதும் முளைக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த  பணத்தை கூட எடுக்க முடியாமல் தவித்து வரும் விவாசாயிகள், தமிழகஅரசு உரிய காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments