பீகார்: 2 கி.மீ. தொலைவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருட்டு
பீகாரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்களை பெயர்த்தெடுத்து திருடி சென்றுள்ளனர்.
சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையொன்று மூடப்பட்டதால் ரயில்நிலையத்தை இணைக்கும் ரயில்பாதை கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.
இதை கவனித்து வந்த மர்ம கும்பல், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துச் சென்று திருடி விற்றுள்ளது.
இந்த திருட்டு தொடர்பாக ரயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments