கிருஷ்ணகிரியில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்ற ராணுவ வீரர்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே ராணுவ போர் தளவாடங்களை ஏற்றி வந்த வாகனத்திற்கு வழிவிடாத பேருந்து ஓட்டுநரை அடித்த ராணுவ அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்க கோரி வாக்குவாதம் செய்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் CISF மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவ அதிகாரிகள் 3 வாகனங்களில் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற அரசு பேருந்து வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராணுவத்தினர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை தாக்கிய நிலையில், பொதுமக்களும், பயணிகளும் ராணுவத்தினர் மன்னிப்பு கேட்டால்தான் வழிவிட முடியும் என்று அவர்களை சூழ்ந்து கொண்டனர்.
அப்போது, ராணுவத்தினர் துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சுட முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த குருபரப்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராணுவ உதவி ஆய்வாளர் பிரதாப் மன்னிப்பு கேட்டபிறகு, ராணுவ வாகனங்களுக்கு வழிவிடப்பட்ட நிலையில், அரை மணி நேரமாக பாதித்த போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
Comments