அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பு

0 1887

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஒப்புதல் அளிக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்கள், டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டன.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து 2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் படிவங்கள் வழங்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை வரை பெற்ற படிவங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், எம்பி சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர்.  இதனை அடுத்து பேட்டியளித்த சி.வி.சண்முகம், வாக்களிக்க தகுதி பெற்ற உறுப்பினர்களில் 2 ஆயிரத்து 501 பேர் தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அவருக்கு எதிராக ஒரு படிவம் கூட சமர்பிக்கப்படவில்லை என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments