ஐஸ்கிரீமில் உயிரிழந்த தவளை.. 3 குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிப்பு..!
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில், உயிரிழந்த தவளை கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தைப்பூசத்தையொட்டி கோவலன் நகரைச் சேர்ந்த அன்புசெல்வம், அவரது தம்பி தமிழரசன் ஆகியோர் குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தபோது, அங்கிருந்த சிற்றுண்டி கடையில் ஐஸ்கிரீம்
வாங்கிக்கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட குழந்தை, தவளை இருப்பதை பார்த்து தந்தையிடம் கூறியுள்ளார்.
ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளையும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Comments