அமெரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24 கோடி மதிப்புடைய போதை பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!
சென்னை விமான நிலைய சரக்கு பெட்டகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபாய் மதிப்புடைய ஹைட்ரோ போனிக் என்னும் போதை பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அமெரிக்காவிலிருந்து கடந்த மாதம் வந்த சரக்குகளை DRI அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அதில் நடத்தப்பட்ட சோதனையில், பிளாஸ்டர் ஆப் பாரிசால் தயாரிக்கப்பட்ட போலி பேசின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அதை உடைத்து திறந்து பார்த்ததில், உள்ளே ஹைட்ரோ போனிக் போதை பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போதை பொருளை பறிமுதல் செய்த அவர்கள், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.
Comments