வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு இழப்பீடும், காப்பீடும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் , 33 சதவீதம் பாதிக்கப் பட்ட வயல்களுக்கு இழப்பீடும், காப்பீடும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல் ஈரப்பதம் 22 சதவீதத்தை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பதாக கூறினார்.
Comments