கணவர் வினீத் தன்னை வைத்து தந்தையிடம் பணம் பறிக்க முயன்றார் - கிருத்திகாவின் அடுத்த வீடியோ

0 8001

தென்காசி மாவட்டத்தில் பெற்றோர்களாகல் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண், காதல் திருமணம் செய்த கணவர் தன்னை வைத்து தந்தையிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாக, புதிய வீடியோ வெளியிட்டு, சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளார்.

இலஞ்சி அருகே கொட்டாக்குளம் பகுதியில் காதல் திருமணம் செய்த கிருத்திகாவை, அவரது பெற்றோர்கள், கணவர் வினித்திடம் அவரை கடத்தி செல்வது போன்ற வீடியோ வெளியான நிலையில், குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருத்திகாவை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, குஜராத்தில் உறவினர் ஒருவரோடு திருமணமாகிவிட்டதாக போட்டோவும், கிருத்திகா பேசிய வீடியோவும் வெளியான நிலையில், வினித்துடன் செல்போனில் தொடர்பு கொண்டு கிருத்திகா பேசிய ஆடியோ சனிக்கிழமை அன்று வெளியானது.

இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் தந்தையிடம் பணம் கேட்டு, தனக்கு  அழுத்தம் கொடுத்ததால் மேத்ரிக் பட்டேல் மூலம் தந்தைக்கு தகவல் தெரிவித்து தன்னை அழைத்துச் செல்லும்படி கூறியதால் பெற்றோர்கள் தன்னை அழைத்து சென்றதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments