பாடகி வாணி ஜெயராம் மரணம் - பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை

0 4857

பாடகி வாணி ஜெயராம், கீழே விழுந்ததில் தலையில் அடிபட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டதில் தான் அவர் உயிரிழந்தார் என, நெற்றியில் உள்ள காயம் மற்றும் மேசையின் விளிம்பில் உள்ள ரத்தக் கறைகளை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாணி ஜெயராம் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த நபர்களும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்திருப்பதாகவும், தடயவியல் துறை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கையின் அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments