ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய இங்கிலாந்து நடவடிக்கை..!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவைப் புறக்கணிப்பது குறித்து விவாதிக்க இங்கிலாந்து தலைமையில் வரும் 10ம் தேதி சர்வதேச நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர்த் தொடுத்ததால் ரஷ்யா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதைத் தடை விதிக்க வேண்டும் என்று ஒலிம்பிக்ஸ் விளையாட்டு கமிட்டிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆனால் ஒலிம்பிக்ஸ் கமிட்டி இதனை ஏற்காததால் உக்ரைன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறது. இதனிடையே ரஷ்யாவைத் தடை செய்யாவிட்டால் 40 நாடுகள் ஒலிம்பிக்சை புறக்கணிக்க நேரிடும் என்று போலந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments