"அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார்..?" - முடிவு செய்யும் 2,675 பொதுக்குழு உறுப்பினர்கள்..!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதை இன்று இரவு 7 மணிக்குள் வாக்குச்சீட்டு மூலமாக தெரிவிக்க வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் படி ஓபிஎஸ் உள்ளிட்ட 2 ஆயிரத்து 675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலமாக வாக்குச்சீட்டு, அதிமுகவின் தீர்மான நகல் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதில் இபிஎஸ் முன்மொழிந்துள்ள தென்னரசுவை ஆதரிக்க சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் எனவும், இல்லையெனில், மாற்று வேட்பாளர் பெயரை வாக்குச்சீட்டில் குறிப்பிட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments