பேஸ்புக்கில் 'பிட்காயின் முதலீடு' என்ற விளம்பரத்தின் மூலம் ரூபாய் 12- லட்சம் மோசடி..!
பிட்காயினில் முதலீடு செய்யுமாறு பேஸ்புக்கில் விளம்பரம் செய்து, தூத்துக்குடியை சேர்ந்த நபரிடம் 12 லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளத்தை சேர்ந்த ராமர், பேஸ்புக்கில் வந்த பிட்காயின் விளம்பரத்திலிருந்த வாட்ஸப் எண்ணை தொடர்பு கொண்டு அதில் பேசியவர் கூறியதுபோல், Protonforex.com என்ற இணையதளத்தில் 12 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
பின்னர் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ராமர், சைபர் கிரைம் இணையதளத்தில் புகாரை பதிவு செய்தார்.
தொழில் நுட்ப ரீதியாக விசாரணை நடத்திய தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார், கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் சென்று கருணாகரன் என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 5 லட்ச ரூபாய், ஸ்கோடா கார், மேக்புக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், வங்கி கணக்கிலிருந்த 10 லட்ச ரூபாயை முடக்கினர்.
Comments