88 கோயில்களை பராமரிக்க அரசு மானியமாக ரூ.3 கோடி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1248

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள 88 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பரமாரிப்பு செலவிற்காக அரசு மானியமாக 3 கோடி ரூபாய்க்கான காசோலையை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் தமிழரசு இதழின் சார்பில், இளைய தலைமுறையினருக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள "இலக்கிய மலர் 2023"- ஐ வெளியிட்டார்.

இதனிடையே, முதலமைச்சரை சந்தித்த விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு 5 கோடி ரூபாய் பங்களிப்பு நிதியினை வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments