திருமண ஆடை வடிவமைப்பில் கேக் செய்து கின்னஸ் சாதனை
திருமண ஆடை வடிவில், அணியக்கூடிய வகையில் கேக் ஒன்றை வடிவமைத்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நடாஷா என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கேக் தயாரிப்பாளரான நடாஷா, ஸ்வீட்டி கேக்ஸ் என்ற பேக்கரியை நடத்தி வருகிறார்.
வித்தியாசமான முறையில் கேக் வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இவர், 131 கிலோ கிராம் எடையில் திருமண ஆடை வடிவில், அணியக்கூடிய வகையில் கேக் தயாரித்து, கடந்த மாதம் 15ம் தேதியன்று சுவிட்சர்லாந்தின் பெர்னில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.
Comments