அமெரிக்காவில் 50க்கும் மேற்பட்டோருக்குக் கண்பார்வை இழக்கக் காரணமாக இருந்த சொட்டு மருந்தை திரும்பப் பெறுவதாக சென்னையைச் சேர்ந்த நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவில் 50க்கும் மேற்பட்டோருக்குக் கண்பார்வை இழக்கக் காரணமாக இருந்த சொட்டு மருந்தை திரும்பப் பெறுவதாக சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மருந்தை வாங்கிய மொத்த வியாபாரிகள், சில்லரை மருந்துக் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மருந்தைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை காணும்படியும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
கண் எரிச்சல் பார்வை வறட்சியைப் போக்கி செயற்கையான கண்ணீரை வரவழைக்கும் இந்த சொட்டு மருந்து பலருக்குப் பார்வை பறிபோகக் காரணமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments