நரபலிக்காக கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

0 3330

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நரபலிக்காக கடத்தப்பட்ட ஐடி ஊழியரின் பெண் குழந்தை 4-மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.

தக்கலையில் கண்ணன் -அகிலா தம்பதியின்  2வயது மகள் திடீரென மாயமானார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நெப்போலியன் ஒரு கிலோ மீட்டர் தூரம் வீடுவீடாக ஆய்வு செய்து காரகொண்டான் விளை என்ற பகுதியில் குழந்தை ஒரு முதியவரிடம் இருப்பதை கண்டறிந்தார்.

விசாரணையில் குழந்தையை கடத்திய முதியவர் 68-வயதான ராசப்பன் ஆசாரி என்பதும் மந்திரவாதியான இவர் வீட்டிலேயே மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. பூஜைப் பொருள் வாங்க சென்றபோது கடத்தி வந்த சிறுமியை நரபலி கொடுக்க முயன்ற நிலையில் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments