நெல்லு பயிரு போச்சே... பெய்து கெடுத்த மழை… கண்ணீரில் விவசாயிகள்..!
திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் காலம் தப்பி பெய்த கனமழை காரணமாக சம்பா, தாளடி நெற்பயிர்களும், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களும் சேதமடைந்துள்ளதாக வேளான் துறை தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலம் தப்பி பெய்த கன மழை காரணமாக சம்பா தாளடி நெற்பயிரகள் நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளதாகவும், உளுந்து பயிர் மழை நீரில் மூழ்கியதாகவும் வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், பாதிப்பு குறித்து வேளாண் அதிகாரிகள் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள 90 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் சாய்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.வேளாண் உதவி இயக்குனர் தலைமையிலான அலுவலர்கள் பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் பெய்த மழை காரணமாக பல ஆயிரம் ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் மழை நீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
Comments