''அனைத்து துறை அனுமதிக்கு பின்னரே பேனா சின்னம்''-பொதுப்பணித்துறை
அனைத்து துறைகளின் ஒப்புதல்களை பெற்ற பின்னரே கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில், கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவிலும் பேனா சிலை அமைக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை குறிப்பிட்டது.
முன்னதாக வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழ் வளர்ச்சித் துறை, காமராஜர் சாலையில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆரின் நினைவிடங்கள், அறிவிக்கப்பட்ட இடுகாடு பகுதி என தெரிவித்தது.
Comments