நாஜி படைகளை தடுத்து நிறுத்தி, வீரமரணம் அடைந்த ரஷ்ய தளபதியின் நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி..!
இரண்டாம் உலகப் போரில், ஹிட்லரின் நாஜி படைகளை, சோவியத் ராணுவம் வீழ்த்தி வாகை சூடியதன் 80ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு ரஷ்யாவின் வோல்கோ கிராட் நகரில் கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த ஸ்டாலின்கிராட் போரில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ரஷ்ய தளபதி ஸ்டாலின் இறந்தபிறகு இந்த நகருக்கு ''வோல்கோ கிராட்'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நாஜி படைகளை தடுத்து நிறுத்தி, வீரமரணம் அடைந்த ரஷ்ய தளபதியின் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து ரஷ்ய அதிபர் புதின் மௌன அஞ்சலி செலுத்தினார்.
Comments