என்னங்க சார் உங்க சட்டம்? போலீசிடம் திருப்பி பிடித்த வாகன ஓட்டி செய்த சம்பவம்..! சாமானியர்கள் ஏமாளிகளா ?
கடலூரில் போக்குவரத்து போலீசார் விசாரணையின் போது தப்பிச்சென்ற டெல்லி பதிவெண் கொண்ட பி.எம்.டபிள்யூ காரை வேறொரு பகுதி போக்குவரத்து போலீசார் மறித்துப்பிடித்த நிலையில், அந்த காரில் இருந்த ஓட்டுனர் டி.எஸ்.பி காரை சர்வீஸ் செய்தவர் என்பதற்காக, விசாரணை இன்றி அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் பாரதி சாலையில் குடியரசு தினத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மறித்து அபராதம் வசூலித்துக் கொண்டிருந்தார்.
அதே வழியாக தலைக்கசம் அணியாமல் சாதாரண உடையில் பைக் ஓட்டிச்சென்ற போலீஸ்காரருக்கு அபராதம் விதிக்காதது ஏன் ? எனக்கேட்டு வாகன ஓட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
அதே போல 31ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் செந்தில் என்பவர் அந்தவழியாக அதிவேகமாக வந்த டெல்லி பதிவெண் கொண்ட பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் வந்த நபர்களை மடக்கி உள்ளார்.
அவர்கள் மது போதையில் இருப்பதாக சந்தேகித்த அவர் காரில் இருந்து இறங்க வைத்த நிலையில், போலீசில் சிக்கியவர்களுக்கு ஆதரவாக டிஎஸ்பி ஒருவர் செல்போனில் பேசி உள்ளார்.
டி.எஸ்.பியின் சிபாரிசு காரணமாக காரில் வந்தவர்களிடம் பிரீத் அனலைசர் வைத்து சோதனை ஏதும் செய்யாமல், டெல்லி பதிவெண் கொண்ட கார் யாருடையது ? கடலூருக்கு அந்த காரில் வந்தவர்கள் யார் ? என்ற எந்த விசாரணையும் செய்யாமல் போக்குவரத்து பணியில் இருந்த அந்த அதிகாரி அனுப்பி வைத்தார்.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், காவல்துறையினர் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் ? என்ற கேள்வியுடன் இரு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Comments