மதுபானக் கொள்கை ஊழல் பணத்தை,கோவா தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆம் ஆத்மி பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் மூலமாக கிடைத்த பணத்தை, கோவா மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கையை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடைகள் உரிமம் வழங்கி லஞ்சம் பெற்றிருப்பதாக ஆம் ஆத்மி அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் அடங்கிய குழுவிடமிருந்து ஆம் ஆத்மி சார்பில் விஜய் நாயர் என்பவர் 100 கோடி ரூபாய் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Comments