8,000 ரூபாய்க்கு பதில் 20,000 ரூபாயை வாரி வழங்கிய இந்தியன் வங்கி ஏடிஎம்..!

0 2076

சென்னை, அம்பத்தூரில், இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த வாடிக்கையாளருக்கு கூடுதலாக பணம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஏடிஎம்மில் 8 ஆயிரம் ரூபாய் எடுக்க வந்த வாடிக்கையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் வந்தது.

10க்கும் மேற்பட்ட இதர வங்கிச் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக பணம் வந்த நிலையில், அதில் 6 பேர் வங்கியில் வந்து பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம்  நிரப்பும் ஊழியர்கள் , 200 ரூபாய்  நோட்டு வைக்க வேண்டிய ட்ரேயில் 500 ரூபாய் நோட்டுக்களை  தவறுதலாக வைத்ததால் இதுபோன்று நடந்ததாகவும், இந்த பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments